கறுப்பு பூஞ்சை தொற்று பரவலை பெருந்தொற்றாக அறிவிக்க உத்தரவு..!
கறுப்பு பூஞ்சை எனப்படும் பிளாக் பங்கஸ் பரவலை பெருந்தொற்று அறிவிக்குமாறு மாநில அரசுகளை சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மியூகார்மைசிஸ் என்ற பூஞ்சையால் உருவாகும் இந்த தொற்று மியூகார்மைசிஸ் என்றழைக்கப்படுகிறது.
கொரொனா ஏற்பட்டு குணமானவர்கள் மத்தியில் இந்த கறுப்பு பூஞ்சை தொற்று காணப்படுகிறது. தலை, முகம், வாய் உள்ளிட்ட பகுதிகளில் பரவி கிடந்த பூஞ்சையால் உயிரிழப்பு வரை ஏற்படும். குறிப்பாக சர்க்கரை நோயிலிருந்து குணமானவர்களுக்கு இது அதிகம் பரவுவதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் இதுவரை 1,500 பேருக்கு இது பரவியதில் 90 பேர் இறந்துவிட்டனர். பல்வேறு மாநிலங்களில் கறுப்பு பூஞ்சை பரவுவதால் இதனைபெருந்தொற்றாக அறிவித்து சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.






