இறந்தவரின் உடைமைகளை கேட்டு வந்த உறவினரை தாக்கிய அரசு மருத்துவர்..!
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடைமைகளை கேட்டு வந்த உறவினரை அரசு மருத்துவர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த 10ஆம் தேதி கொரொனா சிகிச்சையில் இருந்த பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற முதியவர் கழிவறைக்கு சென்றபோது இறந்துவிட்ட நிலையில் அவரை அப்புறப்படுத்தாமல் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு வந்த ராஜேந்திரன் உறவினரான ரவி என்பவர் ராஜேந்திரனின் 2000 ரூபாய் பணம் உள்ளிட்ட உடைமைகளை தருமாறு மருத்துவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதனிடையே நபி தாக்கியதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர் சுகுந்தன் அளித்த புகாரின் பேரில் ரவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






