--- --:--:-- --

தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்..!

2

பெருந்தொற்று குறையாததால் இன்று முதல் காய்கறி, மளிகை கடை, இறைச்சி கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்கவும் இ பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் காய்கறி, மளிகை கடை, இறைச்சி கடைகள் தங்குவதற்கான நேரம் குறைக்கப்படும் என்றும் காய்கறி மளிகை கடை, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கும் எனவும் இவைகளைத் தவிர மற்ற கடைகளுக்கு அனுமதி இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் தமிழகம் முழுவதும் இன்று முதல் தேனீர் கடைகள் இயங்குவதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்கள் உள்ளேயும் வெளியேயும் பயணிக்க இபதிவு கட்டாயம் என்றும் நடைபாதையில் பூ, பழம், காய்கறி கடைகள் இயங்க அனுமதி இல்லை என்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் பொருட்கள் வாங்குவதற்கு அருகிலுள்ள கடைகளுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏடிஎம் மையத்தில் திருமணம் இறப்பு மருத்துவ சிகிச்சைக்காக பயணிக்கையில் இ பதிவு முறை கட்டாயம் என்றும் அதே போல வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கும் இபதிவு முறை கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

பொது மக்கள் முழுமையாக பொது முடக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon