--- --:--:-- --

கொரொனா வார்டில் நடைபெற்ற திருமணம்..!

4

கேரளாவில் கொரொனா வார்டில் திருமணம் நடைபெற்றது. பி‌பி‌ஐ கிட் அணிந்து வந்த மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார். ஆலப்புழாவை சேர்ந்த இளைஞருக்கும், பெண்ணுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் மணமகனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

 

இதனால் அவர் ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருமண தேதி தள்ளிப் போக கூடாது என்பதால் மாவட்ட ஆட்சியர் அனுமதியோடு திருமணம் நடைபெற்றது. பாதுகாப்பு உடையுடன் மணமகள் மருத்துவமனைக்கு வந்தார்.

 

அப்போது மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் மணமகன் மணமகளுக்கு தாலி கட்டியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon