--- --:--:-- --

பாஜக முருகன் போட்டியிடும் தாராபுரத்தில் அரசியல் பிரமுகர்களின் வீடுகளில் ஐ.டி. ரெய்டு!

currency

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக – மதிமுக நிர்வாகிகளில் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

தாராபுரம் நகர திமுகச் செயலாளர் தனசேகரன், மதிமுகவின் மாவட்ட  துணை கவின் நாகராஜ் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

 

தொண்டர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக மாநிலத்தலைவர் எல். முருகன் போட்டியிடுகிறார். இதனால், இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. அவரை எதிர்த்து திமுக சார்பில் என். கயல்விழி, அமமுக சார்பில் கலாராணி, நாம் தமிழர் கட்சி சார்பி ரஞ்சிதா சுரேஷ் உள்ளிட்டவர்கள் போட்டியிடுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon