வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையை கிண்டலடித்த நடிகை டாப்சி..!
பாரிசில் கோடையை கழிக்க கட்டிய சொகுசு மாளிகையில் சாவியை தேடி வருமான வரித்துறை தம் வீட்டில் சோதனை நடத்தியதாக நடிகை டாப்சி கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.
மூன்று நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் டாப்சி, இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரிப்பாளர் விகாஸ் உள்ளிட்டோருக்கு உரிய இடங்களில் சோதனையிட்டு 350 கோடிக்கு மேற்பட்ட வரியைப் ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
இந்த சோதனை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட டாப்சி வருமான வரித்துறையினர் தமது சொகுசு மாளிகை மற்றும் 5 கோடி ரொக்கமாக முன்பணம் பெற்ற புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தியதாக தெரிவித்தார்.
டாப்ஸி உடன் பணியாற்றும் அனுராக் காஷ்யப் மறுபடியும் படப்பிடிப்பில் தாங்கள் இணைய உள்ளதைக் குறிக்கும் வகையில் டாப்சி உடன் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.






