என்னைப் போல சிங்கிளாக உள்ளவர்கள் இயற்கையிடம் அன்பு காட்டுங்கள்..!
தன்னைப்போலவே சிங்கிளாக உள்ள இளைஞர்கள் இயற்கையிடம் அன்பு செலுத்துமாறு நடிகை ரம்யா பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காதலர் தினத்தை முன்னிட்டு சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 143 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் இயற்கையை பாதுகாக்க மரங்களை நடுமாறு இளைஞர்களை வலியுறுத்தினார். குறைந்தபட்சம் வீட்டில் ஒரு செடியாவது நடும் 6 அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.






