தங்கம் விலை 2-வது நாளாக இன்று குறைந்துள்ளது..!
தங்கம் விலை இன்று 2-வது நாளாக சிறிது குறைந்துள்ளது. நேற்றுமுன்தினம் சவரன் தங்கம் விலை 39,000 ரூபாயை தாண்டிய நிலையில் நேற்று 38 ஆயிரத்து 440 ரூபாயாக குறைந்துள்ளது.
இந்நிலையில் கிராம் தங்கம் விலை இன்று 13 ரூபாய் குறைந்து, 4,792 ரூபாயாகவும் சவரன் தங்கம் விலை 104 ரூபாய் குறைந்து 38 ஆயிரத்து 336 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
அதே நேரத்தில் தங்கம் விலை சிறிது குறைந்த போதிலும் வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது. கட்டி வெள்ளியின் விலை கிலோவுக்கு 430 ரூபாய் அதிகரித்து 74,500 ரூபாயாக விற்கப்படுகிறது.






