--- --:--:-- --

டிசம்பர் 23-ம் தேதி வனிதா, பீட்டர் பால் நேரில் ஆஜராக உத்தரவு..!

3

பீட்டர்பாலின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 23-ம் தேதி ஆஜராகும்படி நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர்பால்க்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

பீட்டர்பாலுக்கு தன்னுடனான திருமணம் ரத்து செய்யப்படாத நிலையில் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக அவரது முதல் மனைவி எலிசபெத் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதேபோல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்தார்.

 

புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவின் விசாரணையில் வனிதா விஜயகுமார், பீட்டர் பால் ஆகியோர் 23ஆம் தேதி ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon