--- --:--:-- --

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை ஆன்லைன் வகுப்பு நடைபெறும்..!

4

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை ஆன்லைனில் மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

அதில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்புக்கான வகுப்புகள் ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என்று அறிவித்துள்ளது. நாள்தோறும் ஐந்து வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

 

இறுதி செமஸ்டர் தேர்வு மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon