தமிழகத்தில் நாளை வறண்ட வானிலையே நிலவும்..!
????????????????????????????????????
தமிழகத்தில் நாளை வரை மழைக்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் நாளை வரை வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை நகரைப் பொறுத்தவரை நாளை மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 87.8 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கும் குறைந்தபட்சமாக 71.6 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கும் வெப்பநிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






