--- --:--:-- --

சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி குழுவிடம் விசாரணை..!

2

ற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நட்சத்திரம் சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியில் இயக்குனர் உள்ளிட்ட 5 பேரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்துள்ளது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றிற்கான படப்பிடிப்பில் செவ்வாய் அன்று இரவு சித்ரா பங்கேற்றுள்ளார்.

 

அந்த நிகழ்ச்சியின் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட 5 பேரிடம் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் தீபா சத்யன் உதவி, ஆணையர் சுதர்சன் தலைமையிலான குழுவினர் விசாரணையை துவக்கினார்.

 

படப்பிடிப்பு தளத்தில் இருந்த போது சித்ராவின் மனநிலை குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் சித்ரா சகஜமாகவே இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இதையடுத்து நிகழ்ச்சி தயாரிப்பு குழுவினருடன் நடந்த விசாரணை நிறைவடைந்தது. இதனிடையே ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திவரும் காவல்துறையினர் வாக்குமூலம் பெரும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon