--- --:--:-- --

பாரதியார் சிலையில் இருந்த கைத்தடி காணாமல் போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!

9

டெல்லியில் பாரதியார் சிலையில் இருந்த கைத்தடி திடீரெனக் காணாமல் போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சுப்பிரமணிய பாரதி மார்க்கில் உள்ள பாரதியார் சிலை 1987-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் திறந்துவைக்கப்பட்டது.

 

டெல்லி மாநகராட்சியால் சிலை முறையாக பராமரிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாகவே பாரதியார் சிலையில் இருந்த கைத்தறி காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. பாரதியாரின் 139வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்த வந்த போது சிலையில் கையில் கைத்தடி காணாமல் போகிறது தெரிய வந்துள்ளது.

 

இந்த நிலையில் பாரதியார் சிலையில் இருந்து காணாமல் போன கைத்தடியை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லி தொழில்முனைவோருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான ஜி கே வாசன் கடிதம் எழுதியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon