--- --:--:-- --

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு டிரம்ப் நடத்திய பிரச்சார கூட்டங்களால் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா..!

3

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் நடத்திய 18 கூட்டங்கள் வாயிலாக கொரொனா தொற்று ஏற்பட்டு 700க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் டிரம்ப்பின் தேர்தல் கூட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை நடத்திய கூட்டங்கள் வாயிலாக இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து எதிர்கட்சி தலைவர், டிரம்ப் தனது ஆதரவாளர்களுடன் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை என்று விமர்சித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon