கண்டெய்னர் லாரி சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே விபத்திற்குள்ளானது..!
சென்னை துறைமுகத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே விபத்திற்குள்ளானது. சாலையில் மெட்ரோ பணிக்காக அமைக்கப்பட்டு வந்த இரும்பு பாலத்தை உடைத்து லாரி உள்ளே விழுந்து சிக்கிக்கொண்டது.
இதில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார். இரவு நேரம் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






