--- --:--:-- --

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை மீண்டும் தொடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்..!

2.1

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை மீண்டும் தொடங்கி இருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் அஷ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரொனா தடுப்பூசி மீது தற்போது 3 ஆம் கட்ட பரிசோதனை நடத்தப்படுகிறது.

 

இதில் பிரிட்டனில் தடுப்பூசி போடப்பட்ட சிலருக்கு இயலாத பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் எனவே பரிசோதனையை நிறுத்தி வைத்திருப்பதாகவும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. பக்கவிளைவு எதனால் ஏற்பட்டது என தெரிய வந்த பின்பே ஆய்வு தொடரும் என்றும் அந்த பல்கலைக்கழகம் தன் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

 

இந்த நிலையில் ஒரு சில ஆய்வுகளுக்கு பிறகு அந்த நாட்டு மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்த நிலையில் மீண்டும் தடுப்பூசி சோதனை தொடங்கியிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்கள் தடுப்பூசி சோதனையில் உலகெங்கும் இருந்து 18 ஆயிரம் பேர் பங்கேற்க இருப்பதாக அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon