--- --:--:-- --

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிவிரைவு மோட்டார் சைக்கிள்..! விலை எவ்வளவு தெரியுமா?

11.1

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிவிரைவு மோட்டார் சைக்கிள் ஆன கிர்டன் அக்டோபர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனத்தால் இந்தியாவில் தயாரிக்கப்படும் கிர்டன் இரு சக்கர வாகனம் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடையது.

 

டெல்லி, பெங்களூர், சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இந்த வகை இருசக்கர வாகனங்களை முதலில் அறிமுகப்படுத்த ஒன் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வாகன விற்பனை மையம் அமைப்பதற்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

 

வாகனங்களை வாங்க முன்பதிவு செய்தவர்களுக்கு முதற்கட்ட விற்பனை அக்டோபரில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் விலை ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் ஆகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon