--- --:--:-- --

கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட 12 மணி நேரத்தில் பூரண நலம்!

6

மதுரையில் தீவிர கொரொனா நோய் தொற்றிலிருந்து 54 வயது நபரை பிளாஸ்மா சிகிச்சை மூலம் 12 மணி நேரத்தில் குணம் அடைய வைத்துள்ளதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 

54 வயதுடைய நபர் ஒருவர் கொரொனா நோய் தொற்றால் ஆபத்தான நிலையில் இருந்ததை அடுத்து அவருக்கு 30 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக அரசு மருத்துவமனையின் டீன் சங்குமணி தெரிவித்துள்ளார். ஆக்ஸிஜன் செலுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

 

இதனை தொடர்ந்து 12 மணி நேரத்தில் அவர் பூரணமாக குணமடைந்ததையடுத்து இதே முறையைப் பின்பற்றி தீவிர தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் சங்குமணி தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon