--- --:--:-- --

சொந்த ஊர் மக்களுக்கு ரூ.2000 ஆயிரம் நிவாரணமாக வழங்கிய காரைக்குடி காங்.எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி!!

49ca9794-3abc-417b-b773-b8487147cb87

காரைக்குடி தொகுதி எம்எல்ஏவும் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவருமான கே.ஆர்.ராமசாமி, தனது சொந்த ஊர் மக்களுக்கு 2,000 ரூபாயை கொரோனா நிவாரண உதவியாக தனது சொந்த செலவில் வழங்கினார்.

 

தமிழகத்தில் ஊரடங்கால் மக்கள் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில், வருமானமின்றி இருப்பதால் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்கப்பட்டது.

 

மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், உணவு பொட்டலங்கள் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.அதேபோல் பல கட்சியினரும் நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்வுகளையும் காணமுடிகிறது.

 

இந்நிலையில், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.ஆர் ராமசாமி, தனது சொந்த ஊரான கண்ணங்குடி ஒன்றியம் கப்பலூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதி ஏழை,எளிய குடும்பங்களுக்கு ரூபாய் 2,000 பணத்தை
சொந்த செலவில் வழங்கினார்.

Leave a Reply

Right Menu Icon