மதுக்கு அடிமையானவர் சானிடைசரில் தண்ணிர் கலந்து குடித்த நபர் உயிரிழப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கால் மதுபான கடைகள் மூடப்பட்டதன் காரணமாக பல கோடி நோயாளிகள் திடீரென அப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் விபரீத முடிவுகளில் ஈடுபடும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அது போன்று ஒருவர் சனிடைசர் தண்ணீர் கலந்து குடித்து உயிரிழந்த பரிதாபம் கோவையில் நிகழ்ந்துள்ளது. குளிர்பானத்தில் வார்னிஷ் கலப்பது, சேவிங் லோசனை கலப்பது, பஞ்சர் ஒட்டும் லோஷனை பயன்படுத்துவது போன்ற விபரீதங்களில் குடிநோயாளிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளில் இதுவரை 6 பேர் உயிரிழந்த நிலையில் கோவையில் சேர்ந்த ஒருவர் தண்ணீர் கலந்து குடித்த ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளார். சிலிண்டர் வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பெர்னாட் என்ற இந்த 35 வயது நபர் கோவை சூலூரில் வசித்து வந்தார். இவரது நிறுவனத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக அனைவருக்கும் சானிடைசர் அளித்திருந்தனர்.

 

குடி நோயாளியான பெர்னாட் சானிடைசரில் 60 சதவீதம் ஆல்கஹால் இருக்கும் என்பதால் அதில் தண்ணீர் கலந்து கொடுத்துள்ளார். ஒரு நாள் முழுவதும் கண் விழிக்காமல் இருந்ததை கண்டு குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறந்தவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.

 

சம்பவம் தொடர்பாக சூலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி குடிப்பழக்கத்திலிருந்து இவர்கள் மீண்டு வரலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறும் நேரத்தில் இதுபோன்ற விபரீதங்களும் ஒருபுறம் நடந்து வருகின்றன.


Leave a Reply