--- --:--:-- --

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு சீல் வைத்த இடத்தில் புண் ஏற்பட்டதால் புகார்!

1

தஞ்சையில் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவர்களை அடையாளப்படுத்த அரசு சார்பில் அவர்களது கையில் வைக்கப்பட்ட சீல் புண்ணானதாக புகார் எழுந்துள்ளது. கொரொனாத் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு அரசு சார்பில் கையில் சீல் வைக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் தஞ்சை திருவையாறு அருகே நடுக்கடை பகுதியில் வெளிநாட்டுக்கு சென்று திரும்பி வந்த 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது கையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த சீல் வைக்கப்பட்ட பகுதியில் அரிப்பு ஏற்பட்டு புண்ணாக மாறி உள்ளது.

 

கையில் சீல் வைக்கும் அரசு அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் சீல் வைத்த பிறகு அதனை சுத்தம் செய்யாமல் அப்படியே மற்றவர்களுக்கும் சேர்ப்பதால் இது போன்ற அலர்ஜி ஏற்பட்டுள்ளதாக புகார் கூறுகின்றனர்.

 

ஜெர்மனி நாட்டுக்கு விற்கப்பட்ட முக கலசங்களில் அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது நவீன கொள்ளை என ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முக கவசம் தயாரிப்பதில் அமெரிக்கா ஜெர்மனி இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

 

தற்போது இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியுள்ளது. இது தொடர்பாக பேசிய உள்துறை அமைச்சர்அமெரிக்கா ஜெர்மனிக்கு அனுப்ப 2 லட்சம் முக கவசங்களில் பாங்காக்கில் கப்பலில் தயாராக வைத்து இருந்தது என்றும் தற்போது அவற்றை ஒன்பதாம் படி ஜெர்மனிக்கு கொடுக்கும் அமெரிக்கா மறுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon