ரஜினி, கமல் படும் கஷ்டத்தில் நானும் அரசியலுக்கு வர வேண்டுமா..? நடிகர் பார்த்திபன் கிண்டல் !!!
திரைப்பட நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் எழுதிய கிறுக்கல்கள் கவிதை தொகுப்பு மற்றும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தின் நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழா கோவை புரூக் பீல்ட்ஸ் மாலில் உள்ள ஒடிசி புத்தக கடையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், சினிமா என்பது பெரிய போராட்டம்.இந்த போராட்டங்களை கடந்து தான் ஒவ்வொரு படமும் வெளிவருவதாகவும், தெய்வ மகன் முதல் தேவர் மகன் வரை தேசிய விருதிற்கு சென்ற நிலையில் தன்னுடைய ஒத்த செருப்பிற்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காததால் தான், தானே 50 லட்சம் ரூபாய் செலவு செய்து ஆஸ்காருக்கு அனுப்பியதாக கூறினார்.
மேலும்,தற்போது, இரவின் நிழல், துக்ளக் தர்பார் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்து வருவதாகவும், நகைச்சுவை உணர்வு கலைஞரிடம் இருந்து வந்ததாகவும் கூறினார். தன்னுடைய ஒத்த செருப்பு படத்திற்கு அரசு சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.

அடுத்ததாக, சிங்கிள் ஷாட் படம் ஒன்றை எடுக்க இருப்பதாகவும், ஒத்த செருப்பு படத்திற்கு விகடன் விருது கொடுக்கவில்லை என சுட்டிக்காட்டியவர், நேசிப்பும் காதலும் தான் படம் என்றும், அதற்கு விகடன் மதிப்பு கொடுக்கவில்லை என்றும், புதிய பாதைக்கு 58 மார்க் கொடுத்த விகடன் ஒத்த செருப்பிற்கு 51 மார்க் கொடுத்தது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும்,இனி மேல் விகடன் குழுமத்திடம் இருந்து விருது வாங்க மாட்டேன் என்ற அவர், அரசியலால் ரஜினி,
கமல் படும் கஷ்டம் தனக்கு நன்கு தெரியும்.இனி நான் வேறு அரசியலுக்கு வர வேண்டுமா ? என கிண்டலாக தெரிவித்தார். சினிமாவில் சாதித்த பின் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதாகவும் தெரிவித்தார்.






