--- --:--:-- --

உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் : அதிக ஒன்றிய தலைவர் பதவிகளை கைப்பற்றியது அதிமுக..! மாவட்ட ஊராட்சியிலும் அதிமுக அமோகம்!!

IMG_20200111_144039

மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு திமுகவைவிட அதிமுக கூடுதல் இடங்களை கைப்பற்றியுள்ளது. மாவட்ட கவுன்சில் தலைவர் பதவியிலும் அதிமுக முந்தியுள்ளது.

 

தமிழகத்தில் 27 மாவட்ட ஊராட்சிகளிலும், 314 ஒன்றியங்களிலும் வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திமுகவே அதிக இடங்களை கைப்பற்றியிருந்தது. இதனால் இன்று நடைபெறும் தலைவர் மாவட்ட, ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலிலும் திமுகவே அதிக இடங்களை கைப்பற்றும் என எதிர் பார்க்கப்பட்டது.

 

ஆனால், பல ஒன்றியங்களில் சுயேட்சைகள் மற்றும் மாற்றுக் கட்சியினரை ஆளும் அதிமுக தரப்பில் தங்களுக்கு ஆதரவாக திசை மாற்றியது. இதனால் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

 

தற்போதைய வெற்றி நிலவரம் :

மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி:

மொத்த இடங்கள் : 27

முடிவு அறிவிப்பு : 26

அதிமுக : 14

திமுக. : 12

ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி:

மொத்த இடங்கள் : 314

முடிவு அறிவிப்பு : 282

அதிமுக : 149

திமுக : 128

 

ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான தேர்தல் பல இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் முடிவுகள் அறிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon