--- --:--:-- --

பெண்ணின் கணவரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு ஜோதிடர் தப்பியோட்டம்

13

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை தட்டிக்கேட்ட கணவன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரத்தை அடுத்த வெண்ணந்தூர் பகுதியில் கிருஷ்ணன், வசந்தா தம்பதியினர் வசித்து வந்த நிலையில், அவர்களுக்கு ராமச்சந்திரன் என்ற ஜோதிடர் அறிமுகமாகியுள்ளார்.

 

கிருஷ்ணன் குடும்பத்தினரின் நன்மைக்காக என்று கூறி பல்வேறு பூஜைகளை செய்த ராமச்சந்திரன் பின்னர் அடிக்கடி வசந்தாவிற்கு தொலைபேசி மூலம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து ராமச்சந்திரனை கிருஷ்ணன் கண்டித்துள்ளார். காவல்துறையினரும் ராமச்சந்திரனை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

 

இந்நிலையில் மதுபோதையில் கிருஷ்ணன் வீட்டிற்கு வந்த ராமச்சந்திரன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கிருஷ்ணனின் வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த கிருஷ்ணன் சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய ராமச்சந்திரனை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon