சூப்பர் ஹீரோ’ படம் வர வேண்டும் என்பது எனது ஆசை
தமிழ் சினிமாவில் சூப்பர் ஹீரோ படம் வர வேண்டும் என்பது தமது ஆசை என்றும் அது போன்ற படத்தில் தான் தற்போது நடித்துள்ளதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ஹீரோ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் ராஜேஷ், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




