அதிமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்ய திட்டம் : கருணாஸ்
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவளிப்பதாக அக்கட்சியின் தலைவரும் ,சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவிற்கு ஆதரவாக பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளதாக கருணாஸ் கூறினார்.
குடிமராமத்து பணிகளை அதிமுக அரசு சிறப்பாக செய்துள்ளதாகவும் தம்முடைய தொகுதியில் அதன் பயன் கிடைத்துள்ளதாகவும் கூறினார். முக்குலத்தோர் புலிப்படை எதிர்காலத்திற்காக அதிமுகவிற்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் கருணா தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




