--- --:--:-- --

பள்ளி முடிந்து வீடு திரும்பிய 6 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம் |

2

சேலம் மாவட்டத்தில் 6 வயது சிறுமிக்கு மிட்டாய் தருவதாக கூறிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்த போதை ஆசாமிகளை காவலர்கள் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி பள்ளி சென்று வீடு திரும்பும் போது தான் இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது.

 

அரசு பள்ளிக்கு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் காட்டுப் பாதையில் நடந்து செல்ல வேண்டியிருக்கும் பகுதியில் சம்பவத்தன்று ரயில் தண்டவாளம் அருகே மூன்று இளைஞர்கள் மது அருந்திக்கொண்டு இருந்தனர்.பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பி விட்ட நிலையில் போதை தலைக்கேறிய இந்த மூன்று பேரும் கடைசியில் தனியாக வந்த இரண்டாம் வகுப்பு மாணவியிடம் தண்டவாளத்தை கடக்க உதவுவதாக கூறியுள்ளனர்.

 

மேலும் மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி தாங்கள் மது அருந்திய புதர் பகுதிக்கு தூக்கிச் சென்று சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றி யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்து மிட்டாய் கொடுத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

 

வீட்டிற்கு வந்த சிறுமியின் உடையில் ரத்தம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு நேர்ந்த கொடுமை தெரியவரவே அது குறித்து கேட்டபோது அழுதபடி தமக்கு நடந்ததை கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரையடுத்து ஓமலூர் அனைத்து மகளிர் காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

 

அங்கு யார் யாரெல்லாம் அமர்ந்து மது அருந்துவார்கள் என்பது குறித்தும் அதை பகுதியில் சென்ற மற்ற மாணவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon