தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஜாமீன் கோரி மனு!
பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இந்த ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு மீது அரசுத் தரப்பு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வரும் டிசம்பர் 1-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. முன்னதாக, நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட அருள் விக்னேஷ், டிசம்பர் 11-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




