தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு..!
நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகம் சரிந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தங்கம் விலை தொடர் சரிவைக் கண்டு வருகிறது. கடந்த 16 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 15,360 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. தொடர்ந்து குறைந்த வந்த தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் எகிறியது. அந்த வகையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகை பிரியர்களின் மகிழ்ச்சிக்குத் தடை போட்டிருக்கிறது.
நேற்று முன்தினம் (நவம்பர் 21) நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.11,465க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.91,720க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை சற்று உயர்ந்தது. அதன்படி, இன்று (நவம்பர் 23) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,600க்கும், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.165 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,495க்கும், சவரனுக்கு ரூ.1320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.75,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி கிராம் ரூ.175க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




