--- --:--:-- --

எம்.எல்.ஏ-க்களுக்கு தீபாவளி பரிசு கொடுத்தது தான் கடும் நடவடிக்கையா?

6

சமீப காலமாக த.வெ.க எம்.எல்.ஏ-க்கள் செயல் சமூக வலைதளத்தில் பேசுப் பொருளாகியுள்ளது. அதாவது, துணைச் சபாநாயகர் ரவி சங்கர் மனு கொடுக்க வந்தவரை தாக்கியதாக வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏல் அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிதாகவும், மாவட்ட ஆட்சியரின் வீட்டிற்கே சென்று அவருக்கு தொல்லை கொடுத்தகாவும் புகார்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.

 

 

இந்நிலையில், புதன்கிழமை த.வெ.க எம்.எல்.ஏ க்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னைக்கு அருகில் உள்ள ஈ.சி.ஆர் பகுதியில் உள்ள ரிசார்ட்டில் நடைபெற்ற கூட்டத்தில் த.வெ.க எம்.எல்.ஏக்களுக்கு தலைமை கடுமையான எச்சரிக்கை விடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், த.வெ.க எம்.எல்.ஏக்களுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 

 

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தவறு செய்தால் விடமாட்டேன்” என முதலமைச்சர் விஜய் தனது கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு ‘கடும் எச்சரிக்கை’ விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.

 

 

முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்? பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் ‘Strict officer’ செய்தது என்ன?

 

 

இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார். இதுதான் அந்த கடும் நடவடிக்கையா? பஞ்ச் டயலாக் மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை! ரியல் ஆக்‌ஷன் எடுத்து, தான் எவ்வளவு ஸ்ட்ரிக்ட் என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon