அம்பி அந்நியன் போல மாறி மாறிப் பேசுகிறாரா? ராஜ்மோகனுக்கு தி.மு.க பரந்தாமன் கேள்வி!
துணைச் சபாநாயகரால் தாக்குதலுக்குள்ளான நபர் ‘அந்நியன்’ திரைப்படத்தில் வரும் அம்பி கதாபாத்திரம் போல மாறி மாறிப் பேசுகிறாரா என்று வினா எழுப்பியுள்ள தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், தாக்குதலில் ஈடுபட்ட துணைச் சபாநாயகர் சட்டமன்றத்தை வழிநடத்துவதற்கே தகுதியற்றவர் எனச் சாடியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரே மதிப்பளித்து மரியாதை கொடுக்கும் ஒரு உயர் பதவியில் உள்ள நபர் எவ்வாறு இதுபோன்று நடந்துகொள்ள முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் பேசிய கருத்துகளுக்குத் தனது கடும் எதிர்ப்பையும் கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




