--- --:--:-- --

திண்டுக்கல் தொகுதி தேர்தல் வழக்கு: த.வெ.க வேட்பாளர் மனு தள்ளுபடி – ஐகோர்ட் உத்தரவு

12

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஐ.பி. செந்தில் குமார் வெற்றிபெற்றதை எதிர்த்து, த.வெ.க வேட்பாளர் நசீர் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

 

 

இந்த நிலையில், நசீர் ராஜாவின் மனுவை நிராகரிக்கக் கோரி தி.மு.க வேட்பாளர் செந்தில் குமார் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், த.வெ.க வேட்பாளர் நசீர் ராஜா தாக்கல் செய்த தேர்தல் வழக்கை அதிரடியாகத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon