டெண்டர் கோரிய த.வெ.க அரசு
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் தற்போது நேரலை செய்யப்பட்டு வருகிறது. இந்த நேரலை கடந்த தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்று கூறப்படும் நிலையில் தற்போதும் தொடர்ந்து நேரலை செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் புதிதாக ஆட்சி அமைத்த த.வெ.க அரசு 21 நாட்கள் சட்டசபை கூட்டத் தொடரை நடத்தியது.
இதில், 11 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், சட்டசபையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் கேள்விகள் அதற்கான பதில்கள் முதல் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டமன்ற நடவடிக்கைகளை 2 ஆண்டுகளுக்கு நேரலை செய்ய தனியாருக்கு ஒப்பந்தம் விட அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2027 முதல் டிசம்பர் 2028-ம் ஆண்டு வரை சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற நேரலையை ஏராளமான மக்கள் தொலைக்காட்சி, செல்போன்களில் பார்த்தனர். மக்களிடையே அமோக வரவேற்பும் கிடைத்ததது என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





