--- --:--:-- --

4 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!

1

இரவு முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடிய விடிய கொட்டும் கனமழை காரணமாக, சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் தொடர்ந்து மழை கொட்டியதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் இரவு முழுவதும் தொடர்ந்து மழை கொட்டியதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விடிய விடிய கனமழை கொட்டும் காரணமாக, 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon