--- --:--:-- --

கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசல் -கோர விபத்தில் 18 பேர் பலி

5

மேற்கு வங்கத்தின் முக்கிய விழாவான துர்கா பூஜையின் போது கொல்கத்தாவில் உள்ள ஒரு பிரபல பூஜை பந்தலில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சனிக்கிழமை மாலை 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையே சோர்பகன் (Chorbagan) பூஜை பந்தலில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது.

 

 

பந்தலுக்குள் நுழைய பெரிய அளவிலான கூட்டம் காத்திருந்ததை அப்பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன. இப்பகுதி குறுகிய சந்திகளைக் கொண்டதாகும். அங்கு மூன்றிலிருந்து நான்கு பேர் மட்டுமே பக்கத்து பக்கத்தில் நடக்க முடியும். குறுகிய சந்திகள் மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய தொண்டர்கள் இல்லாதது, மழை பெய்ததால் மக்கள் உடனடியாக பந்தலுக்குள் தஞ்சம் புக முற்பட்டது, கூட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் பந்தல் இடிந்து விழக்கூடும் என்ற வதந்தியும் எச்சரிக்கையும் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது” உள்பட பல காரணங்கள் இந்த துயரத்திற்கு வழிவகுத்துள்ளன.

 

 

காயமடைந்தவர்களும் உயிரிழந்தவர்களும் அங்கிருந்து இரண்டு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ள கல்கத்தா மருத்துவக் கல்லூரிக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். நள்ளிரவு வரை உறவினர்கள் கண்ணீருடன் மருத்துவமனை வாசலில் காத்திருந்தனர்.

 

 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்வர் சுவேந்து அதிகாரி மருத்துவமனைக்கு நேரில் சென்று நிலவரத்தை ஆய்வு செய்தார். பூஜை அமைப்பாளர்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு காவலர்களை காவல்துறை காவலில் எடுத்துள்ளதாகவும், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் ரூ. 2 லட்சம் நிதியுதவியும், காயமடைந்தோருக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி இந்த துயர சம்பவத்திற்கு ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்துள்ளார். அதேசமயம், காவல்துறையினரின் குற்றவியல் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon