சுரங்கபாதைகளில் தேங்கிய மழைநீர் அகற்றம்!
சென்னையில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் நள்ளிரவில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து வழக்கம்போல் உள்ளதாக மாநகராட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2023 டிசம்பர் மாதத்திற்குப் பிறகு சென்னையில் நேற்று அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக தமிழ்நாடு எல்-நினோ தாக்க ஆய்வுக்குழு உறுப்பினர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




