--- --:--:-- --

சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் சார்பில் ஜெயிலர்-2 படக் கொண்டாட்டம் : நலத்திட்ட உதவியாக படம் பார்த்து வந்த அனைவருக்கும் 5 கிலோ அரிசி தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் வழங்கினார்

11

சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று வெளியாகி ஆன்லைனில் அசத்தலான திரைப்படம் என நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்த ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. முழுமையான மாஸ் பொழுதுபோக்கு திரைப்படமான இப்படத்தில் ஹீரோ பில்டப் காட்சிகள், சிலிர்ப்பூட்டும் காட்சிகள், நெல்சனின் நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக உள்ளது.

 

அனிருத் மறுபடியும் ரஜினிகாந்திற்கு அசத்தலான பின்னணி இசையை வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சிகள் வெளியாகிய நிலையில், திருப்பூரில் உள்ள திரையரங்குகள் முழுவதும் திருவிழா கோலம் பூண்டுள்ளது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் மக்கள் கழகத்தின் சூப்பர் ஸ்டார் மகளிர் சேவை மையம் மற்றும் சூப்பர் ஸ்டார் இளைஞர் பேரவை சார்பில் அவிநாசி சிந்தாமணி தியேட்டர் மற்றும் திருப்பூர் கணேஷ் தியேட்டர் ஆகிய 2 தியேட்டர்களிலும் ஆண் தொழிலாளர்களுக்கவும், அவிநாசி காஸ்மோ தியேட்டர் மற்றும் திருப்பூர் சக்தி தியேட்டர் ஆகிய 2 தியேட்டர்களிலும் பெண் தொழிலாளர்களுக்கவும் பிரத்தியேக ஷோ ஏற்பாடு செய்யப்பட்டு விலையில்லா டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு தொழிலாளர்கள் படத்தை ரசித்து பார்த்தனர்.

 

முன்னதாக ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கேரளா செண்டை மேளம், குழந்தைகளை மகிழ்விக்க கரடி பொம்மை, மிக்கி மவுஸ் பொம்மை உள்பட பல்வேறு ரசிக்கும் கொண்டாட்டங்களை ரசிகர்கள் செய்ததால் அனைவரும் ரசிக்கும் படியாக இருந்தது. மேலும் பட்டாசுகள் வெடித்தும், படத்திற்கு வந்தவர்களுக்கு ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். அதுமட்டுமின்றி டிஜே பார்ட்டிகளும் வைத்து ரசிகர்கள் ஆரவாரத்தில் இருந்தனர்.

 

இது ஒருபுறம் இருக்க சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் சார்பில் திருப்பூர் கணேஷ், சக்தி, அவிநாசி சிந்தாமணி, மற்றும் காஸ்மோ அஆகிய 4 தியேட்டர்களில் இருந்து ஜெயிலர் 2 படம் பார்த்து வந்த அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளாக 5 கிலோ தரமான அரிசியை சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் தலைவர் எஸ்.எஸ்.முருகேஷ் வழங்கினார். விழாவில் சூப்பர் ஸ்டார் மக்கள் கழக மகளிரணி நிர்வாகிகள் மூத்த நிர்வாகி கண்ணம்மாள், ராதா, ராஜேஸ்வரி, மல்லிகா, அமுதா, செல்வராணி, அதேபோல் இளைஞரணி நிர்வாகிகள் அன்புராஜன், பிரமோஸ், ஈஸ்வரன், ஹரி உள்பட நிர்வாகிகள் நான்கு திரையரங்குகளில் ஐந்தாயிரம் பேருக்கும் அதிகமாக இந்த அரிசி சிப்பத்தை வழங்கினர்.

 

 

 

தலைவர் படத்துக்கு கொண்டாட்டங்கள் அதிக அளவில் இருந்த போதிலும் மக்களுக்கும் பயன்பெற வேண்டும் என்ற எண்ணத்தில், ரஜினி படம் வெளியாகும் ஒவ்வொரு முறையும் இது போன்ற உதவிகள் செய்து வருவதாகவும் தற்பொழுது அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருக்கும் சூழலில் இந்த ஐந்து கிலோ அரிசி என்பது மக்களுக்கு உதவியாக இருக்கும் என சூப்பர் ஸ்டார் மக்கள் கழக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon