தமிழ்நாட்டு பெண்களை தப்பா பேசினால் பொறுத்துக்கொள்ள மாட்டேன்..!
மதுராந்தகத்தில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்துப் பேசிய முதலமைச்சர் விஜய் தி.மு.க-வை கடுமையாக விமர்சித்தார். அப்போது விஜய் பேசியதாவது: “என் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்க முடியவில்லை என்ற கடுப்பில், விரக்தியில் தி.மு.க-வினர் ஒரு அபாயகரமான ஆயத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.
எனது சொந்தத் தாயை, என்னை பெற்ற தாயை, எனது அம்மாவை அவர்கள் தப்பாக பேசும்போது கூட நான் பொறுத்துக் கொண்டேன். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கிற என்னுடைய அம்மா, அக்கா., தங்கைகள், எனக்கு துணையாக இருக்கிற தாய் அன்பு காட்டுகிற தமிழ்நாட்டுப் பெண்களை அவர்கள் அசிங்கமாக பேசும் போது என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
தி.மு.க தலைமையும் இப்படி தான் பேசுகிறார்கள், தி.மு.க குடும்பத்தில் இருந்தும் இப்படித்தான் பேசுகிறார்கள். அந்த பழக்க தோஷத்தில் ஸ்டாலின் சாரும் அந்த குடும்பத்தில் இருக்கிறவர்களும் உக்காந்து ரசிக்கிறார்கள். இனிமேல் இதை யாரும் பொறுத்துக் கொள்ளவே முடியாது” என்று கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




