--- --:--:-- --

வீரமணியைக் காப்பாற்ற திமுக ஆட்சியில் நடந்த டீலிங் என்ன? வாயைத் திறங்கள் ஸ்டாலின் சார்: விஜய் கேள்வி

3

மதுராந்தகத்தில் த.வெ.க வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: இங்கே இன்னொரு கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. அதை பற்றி பேச வேண்டாம் என்றுதான் நினைத்தேன். நம்முடைய தமிழ்நாட்டு இளம் பெண்களை பச்சைப் பிள்ளைகளை ஒருத்தன் இத்தனை வருடங்களாக சீரழித்துக் கொண்டிருந்தான்.

 

 

அந்த வழக்கு போன தி.மு.க ஆட்சியில் வந்தும் அந்த வழக்கை அந்த அத்தியாயத்தை அந்த வழக்கின் வரலாற்றையே மூடி மறைத்து விட்டார்கள். இதற்காக உள்ளுக்குள்ளே என்ன டீலிங் நடந்தது. தமிழ்நாடே கேட்கிறது, வாயை திறங்கள் சார், ஸ்டாலின் சார் வாயை திறங்கள். உங்களோடு சேர்ந்து அந்த மற்றும் பலரும் வாயை திறக்காமல் இருக்கிறார்கள். இதில் கூடவா கூட்டு, இதுல கூடவா கூட்டு சேர்ந்து கொண்டு வாய் திறக்காமல் இருப்பீர்கள்.

 

 

என்னமோ இவர்கள் பெண்கள் பாதுகாப்புக்கு என்றே பிறந்த மாதிரி, இந்த தி.மு.க-வும் இந்த மற்றும் பலரும் பேசுகிறார்கள். இப்போது அவனைப் பற்றியும் வாயை திறக்கவில்லை. அந்த ஆளைப் பற்றியும் வாய் திறக்கவில்லை. இத்தனை வருடமாக மூடி மறைத்து வைத்திருந்த ஒரு விஷயத்தை விஜய் வந்தவுடன் தோண்டி எடுத்து அந்த நபரை உள்ளே தூக்கி வைத்து விட்டான். அந்த அதிர்ச்சியில் வாயைத் திறக்க திறக்காமல் இருக்கிறீர்களோ என்று எனக்கு தெரியவில்லை.

 

 

எல்லாமே அவர்கள் பச்ச பிள்ளைகள், அவர்களுடைய வலியைப் பற்றி வெளியில வந்து பேச முடியவில்லை என்றால் அப்புறம் நீங்கள் என்ன அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். இத்தனை வருஷமாக நீங்கள் என்ன அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள், அதனால் மக்களே இந்த இடைத்தேர்தலில் இந்த தீய சக்திக்கு மற்றும் பலருக்கும் சரியான ஒரு பாடம் புகட்டியாக வேண்டும்” என்று விஜய் பேசினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon