முதலமைச்சர் விஜய் கடிதத்துக்கு AAI விளக்கம்!
தமிழ்நாட்டில் விமான எரிபொருளுக்கான 29 சதவீத VAT வரியே விமான சேவை அதிகரிக்க தடையாக உள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை விமான நிலைய நிர்வாகத்தை இந்திய விமான நிலைய ஆணையத்திலிருந்து வேறு ஒரு அமைப்புக்கு மாற்றக் கோரி கடந்த மாதம் 5ஆம் தேதி பிரதமர் அலுவலகத்திற்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதி இருந்தார்.
அந்தக் கடிதம் கடந்த மாதம் 14-ஆம் தேதி சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்திற்கு விளக்கம் அளிக்குமாறு விமான நிலைய ஆணையத்துக்கு கடந்த 10ஆம் தேதி விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது. இந்நிலையில், இதற்கு விமான நிலைய ஆணையம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில், அதிக வரி காரணமாக விமான சேவைகளை அதிகரிப்பதில் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீக் ஹவர்களில் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விமான முனையப் பகுதியில் விஐபி வாகனங்கள் இயக்கம் உள்ளிட்ட உள்ளூர் பிரச்சனைகள் விமான நிலைய செயல்பாட்டை பாதிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025-26ஆம் நிதியாண்டில் பயணிகள் போக்குவரத்து 2.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் மூலம் சுமார் 15 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் ஆப்பிள் ஐபோன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், விமான நிலைய ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




