அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்க 5 ஆண்டுகள் ஆகும்!
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கொடுத்துள்ள வடிவமைப்பின் படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அயோத்தியில் ராமர் கோயில் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு முதல் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது விஷ்வ ஹிந்து பரிஷத். கோயில் கட்டுமானப் பணியில் 250க்கும் மேற்பட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் ஈடுபடுவார்கள் என்றும், கோவிலுக்கு தேவையான 212 தூண்களில் 106 தூண்கள் தயாராகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோயில் கட்டுமானப் பணி இனிதான் தொடங்கும் என்பதால் பணி மூடிய 5 ஆண்டுகள் ஆகலாம் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






