--- --:--:-- --

இரு கிராமத்தினர் இடையே மோதல் – 7 பேர் படுகாயம்

6

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, இருசக்கர வாகனம் மோதியதில் இரு கிராம இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டது. வாகன சாவியைப் பறித்ததால் ஆத்திரமடைந்த கும்பல், கத்திகளுடன் எதிர்த்தரப்பினரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

 

 

இந்த தாக்குதலில் காயமடைந்த 7 இளைஞர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உதயேந்திரம் மற்றும் கொல்லகுப்பத்தைச் சேர்ந்த இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறு, இரு தரப்பினரிடையேயான மோதலாக மாறியது. மோதல் தொடர்பான அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon