மோடி-லிமிட்டேஷன் மிகப்பெரிய அரசியல் சதி – மாணிக்கம் தாகூர் கடும் குற்றச்சாட்டு
மாணிக்கம் தாகூர், தொகுதி மறுவரையறை மசோதாவை கடுமையாக விமர்சித்து, “இது அப்பட்டமான அநீதி” என்று தெரிவித்துள்ளார். மேலும், “மோடி-லிமிட்டேஷன் (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கும் மிகப்பெரிய அரசியல் சதி.
50 சதவீதம் தொகுதிகள் உயர்த்தப்படும் என்ற ஆசை காட்டி, தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. தமிழ்நாட்டிற்கு துரோகம் இழைக்கும் இந்த மசோதாவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




