60,000 விவசாயிகள்.. ரூ.1,500 கோடி வசூல்.. மின் இணைப்பு எங்கே? அன்புமணி கேள்வி..!
தட்கல் திட்டத்தின் கீழ் வேளாண் மின் இணைப்புக்காக விண்ணப்பித்த சுமார் 60,000 விவசாயிகளுக்கு 8 மாதங்களாக மின் இணைப்பு வழங்காமல் அரசு ஏமாற்றி வருவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், விவசாயிகளிடம் ரூ.1,500 கோடி வசூலித்துவிட்டு, அவர்களுக்கு மின் இணைப்பு வழங்காமல் கூடுதல் துயரத்தை அரசு ஏற்படுத்தக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்தால் உழவர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




