--- --:--:-- --

லிவ்-இன் உறவில் இருப்போருக்கும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் பொருந்தும்..!

01

லிவ்-இன் உறவில் இருப்போருக்கும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் பொருந்தும் என உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கு குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் பொருந்தாது எனக் கூறி, தன் மீது ஐபிசி 498ஏ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரிய ஒருவர் நீதிமன்றத்தை நாடினார். இந்த கோரிக்கையை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

 

 

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோங்மெங்கபம் கோதிஸ்வர் சிங் மற்றும் சஞ்சய் கரோல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 498ஏ லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்களுக்கும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் பொருந்தும் எனத் தீர்ப்பளித்தனர்.

 

 

கணவர் அல்லது கணவர் குடும்பத்தினரால் மனரீதியாக, உடல்ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாவது அல்லது தற்கொலைக்கு தூண்டுதல் போன்ற குற்றங்களில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே இச்சட்டத்தின் நோக்கம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

 

 

இந்நிலையில், இதுபோன்ற குற்றங்கள் திருமணத்திற்கு பின் மட்டுமே நிகழும், அதற்கு முன் நிகழாது எனக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கண்ணோட்டம் எனவும் கருத்து தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon