ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்..!
தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தணிக்கை தொடர்பான பிரச்சினைகளைத் தாண்டி, ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் தங்களின் ஏகோபித்த வரவேற்பை அளித்து வருகிறார்கள்.இந்த நிலையில் ஈரோடு, சத்தியமங்கலத்தில் உள்ள திரையரங்கில் திடீரென வருகை தந்த அமைச்சர் செங்கோட்டையன், ஜனநாயகன் திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




