--- --:--:-- --

பாம்பு கடிக்கு மருந்து இல்ல; தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கு ரூ. 755 கோடி டெண்டர்

4

மிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில் த.வெ.க., தேர்தல் வாக்குறுதியின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை செப்டம்பர் 15-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார்.

 

 

இந்த திட்டத்திற்கு, 4 லட்சத்து 41,667 தங்க மோதிரங்களை, 755.83 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் வெளியிட்டுள்ளது. டெண்டர் கோர விரும்பும் நிறுவனங்கள், ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

 

இந்நிலையில், தமிழகத்தில் பாம்பு கடிக்கு மருந்து இல்லை. ஆனால், தங்க மோதிர திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளதாக மருத்துவர் ஒருவர் சமூக வலைதளத்தில் வேதனையுடன் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த மாதம், தென்காசி மாவட்டத்தில் பாம்பு கடிக்கான உயிர் காக்கும் மருந்து பற்றாக்குறை இருப்பதாக வெளியான செய்திகள், அரசு மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு எந்த நிலையில் உள்ளது என்பதைத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

 

 

ஆனால், இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகம் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்காக ரூ.755.83 கோடி மதிப்பிலான மாபெரும் டெண்டரை இன்று கோரியுள்ளது. தமிழக அரசின் இந்தத் தவறான முன்னுரிமைகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

 

நோயாளிகள் உயிர் காக்கும் மருந்துகளைப் பெறுவதற்கே போராடி வரும் வேளையில், அரசின் முதல் மற்றும் முதன்மையான பொறுப்பு என்பது ஒவ்வொரு ஆரம்பச் சுகாதார நிலையத்திலும் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் தங்கு தடையின்றி மருந்துகள் கிடைப்பதையும், விநியோகிக்கப்படுவதையும் உறுதி செய்வதுதானே தவிர, பல கோடி ரூபாய் செலவில் புதிய திட்டங்களுக்கான கொள்முதல்களைத் தொடங்குவது அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon