உடன்பாடில்லாத ஆடை, காட்சிகள் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகை கயாடு லோஹர்..!
தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் கயாடு லோஹர். இவர் தமிழில் வெளியான டிராகன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.மேலும் இவர் நடித்த இதயம் முரளி திரைப்படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. அடுத்ததாக Immortal, I’m Game, மஞ்சணத்தி, The Paradise, சூர்யா 48 என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியது, “படப்பிடிப்பில் எனக்கு உடன்பாடில்லாத ஆடை அல்லது காட்சிகள் இருந்தால் இயக்குநர், படக்குழுவினரிடம் வெளிப்படையாக பேசிவிடுவேன். ஒவ்வொரு நடிகருக்கும் தனிப்பட்ட எல்லைகள் உள்ளன. அவை மதிக்கப்பட வேண்டும்.
திறந்த உரையாடலே பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான பணி சூழலை உருவாக்கும். எனவே நம்முடைய எல்லைகளில் உறுதியாக இருப்பதும், நம் கவலைகளை தெரிவிப்பதும் மிகவும் முக்கியம்” என கூறியுள்ளார்.





