பா.ஜ.க.வை வீழ்த்த தி.மு.க- த.வெ.க. ஒன்றிணைய வேண்டும்: சி.பி.ஐ. வீரபாண்டியன் பேட்டி
இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு, அதன் அடித்தளமான மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதே முதல் கடமை. மத அடிப்படைவாத சக்திகளைத் தனிமைப்படுத்தவும், முறியடிக்கவும் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கு இடையே தேர்தல் போட்டிகளும், வெற்றிகளும், தோல்விகளும் இயல்புதான்; ஆனால், தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்கும் வகுப்பவாத சக்திகளைத் தடுப்பதே அரசியலில் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும். -தருமபுரியில் சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் பேட்டி





