சென்னை மாநகராட்சியின் ரூ.700 கோடி வரையிலான டெண்டர்கள் ரத்து..!
சென்னை மாநகராட்சி செலவினங்களை முறைப்படுத்த, வேளச்சேரி புதிய மேம்பால திட்டம் உள்ளிட்ட ரூ.700 கோடி வரையிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிதிச்சுமை காரணமாக ரத்து செய்யப்பட்ட டெண்டர்கள் மறுஆய்வு செய்யவும், நிதி நிலைமை சீரடைந்த பிறகு, திட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட்டு புதிய டெண்டர்கள் கோரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் ரூ.284 கோடி மதிப்பிலான நடைபாதை திட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.





